முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2025-02-20

சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இன்று நான் திறந்து வைக்கிறேன். இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரைச் சூட்டிப் பெருமையடைகிறோம். சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து