எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸில் தோற்றது. அதாவது இந்திய அணி கடைசியாக கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸில் வெற்றி கண்டிருந்தது. அதன்பிறகு நடைபெற்ற 20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்தது. இந்த தொடர் தோல்விகளுக்கு கே.எல். ராகுல் இந்த போட்டியில் டாஸ் வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி டாஸை வென்றுள்ளது.
______________________________________________________________________________________________
இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.
இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
______________________________________________________________________________________________
இந்திய வீராங்கனை சஸ்பெண்ட்
இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது மூன்றாவது டோப்பிங் வயலேஷன் ஆகும். இது அவரது 20 ஆண்டுகால கேரியருக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
அவரது பயிற்சியாளரும் தடைசெய்யப்பட்ட பொருள்களை விநியோகித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா புனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.
______________________________________________________________________________________________
ஆஸி., வீரர் ஸ்டார்க் சாதனை
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஸ்டார்க் படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்கள் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் ஸ்டார்க் (1003) உள்ளார். 1020 ரன்களுடன் கம்மின்ஸ் 8-வது இடத்தில் உள்ளார்.
முதல் 7 இடங்கள் முறையே ஸ்மித் (4358), மார்னஸ் லெபுஷன் (4350), டிராவிஸ் ஹெட் (3477), கவாஜா (3290), டேவிட் வார்னர் (2423), அலெக்ஸ் கேரி (2099), கேமரூன் கிரீன் (1634) ஆகியோர் உள்ளனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்சில் அதிக ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் ஸ்டார்க் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 51 போட்டிகளில் 1003 ரன்கள் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் 4 இடங்களில் அஸ்வின், ஜடேஜா, பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர்.
______________________________________________________________________________________________
தமிழக வீரர் வேலவன் ‘சாம்பியன்’
எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் டெல்லியை சேர்ந்த 17 வயது வீராங்கனையான அனாஹத் சிங் 11-8, 11-13, 11-13, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் 39 வயது ஜோஸ்னா சின்னப்பாவை போராடி சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
______________________________________________________________________________________________
பேசுபொருளான மந்தனா செயல்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' தற்போது இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது நீக்கிவிட்டார்.
திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.அதில் இன்ஸ்டாகிராமில் அவர் விளம்பரா வீடியோ வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவன விளம்பரத்தில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் இந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பு படமாக்கப்பட்டதா என்பதும் முழுமையாக தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
07 Dec 2025விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர்
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.


