முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      இந்தியா
Air-India 1

டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

விமானிகள், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 1000 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ.18,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ. 26,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து