முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சென்னை கோர்ட் தீர்ப்பு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வேண்டும் என்று சென்னை கோர்ட் தீர்ப்பளித்தது.

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 44). இவர் பால், தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாரதி (37). தையல்தொழிலாளி. இந்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் கடந்த 6-3-2020 அன்று தரமணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நீதிராஜன், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் 2 பேரின் இறப்புக்கு தனித்தனியாக இழப்பீடு கோரி அவர்களது குடும்பத்தினர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், நீதிராஜன் இறப்புக்கு ரூ.21 லட்சத்து 64 ஆயிரமும், பாரதியின் மறைவுக்கு ரூ.25 லட்சத்து 72 ஆயிரத்து 800-ம் என மொத்தம் ரூ.47 லட்சத்து 36 ஆயிரத்து 800-ஐ இழப்பீடாக அவர்களது குடும்பத்தினருக்கு தனியார் காப்பீடு நிறுவனத்தினர் வழங்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து