முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது : முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா-அல்ஜீரியா மோதல்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      விளையாட்டு
World-Cup-1

Source: provided

லண்டன் : 48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா  உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது. இதில் முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா-அல்ஜீரியா மோதுகின்றன.

27 மாதங்களாக...

12 குழுக்களாக (குரூப் ஏ முதல் குரூப் எல் வரை) பிரிக்கப்பட்டிருக்கும் இந்த அணிகளில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீன அணியும் அல்ஜீரிய அணியும் மோதுகின்றன. 27 மாதங்களாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இதுவரை 42 அணிகள் தேர்வாகியுள்ளன. மீதமுள்ள 6 அணிகள் ஃபிளே -ஆப்ஸ் மூலமாக தேர்வாகும்.

48 அணிகள் தகுதி...

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியாகியுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அடுத்தாண்டு ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஜூலை 19ஆம் தேதி முடிவடைகின்றன. உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஃபிஃபா தலைவர் அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான விருதையும் வழங்கி கௌரவித்தார்.

குரூப் ஏ: 

மெக்சிகோ,  தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பிளே-ஆஃப் டி வெற்றியாளர்.

குரூப் பி:

கனடா, பிளே-ஆஃப் ஏ வெற்றியாளர், கத்தார், ஸ்விட்சர்லாந்து.

குரூப் சி:

பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து.

குரூப் டி:

அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, பிளே-ஆஃப் சி வெற்றியாளர்.

குரூப் இ:

ஜெர்மனி, குராசியோ, ஐவரி கோஸ்ட், ஈக்குவாடர்.

குரூப் எஃப்:

நெதர்லாந்து, ஜப்பான், பிளே-ஆஃப் பி வெற்றியாளர். துனிசியா.

குரூப் ஜி:

பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து.

குரூப் எச்:

ஸ்பெயின், கேப் வெர்டே, சௌதி அரேபியா, உருகுவே.

குரூப் ஐ:

பிரான்ஸ், செனகல், பிளே-ஆஃப் 2 வெற்றியாளர். நார்வே

குரூப் ஜே:

ஆர்ஜென்டீனா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்.

குரூப் கே:

போர்ச்சுகல், பிளே-ஆஃப் 1 வெற்றியாளர், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா.

குரூப் எல்:

இங்கிலாந்து, குரோசியா, கானா, பனாமா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து