முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      அரசியல்
Seaman 2024-02-17

சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுக்கு நிகராக நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரகுபதி பீமன் (வயது 46), கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் கார்த்திக் (31) போட்டியிடுகின்றனர். பேராசிரியரான ரகுபதி பீமன் பி.எச்டி. முடித்துள்ளார். அவரது தந்தை பீமன் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்கிறார். ரகுபதி பீமன், கையூட்டு ஒழிப்பு பாசறை மாநில பொறுப்பாளராக உள்ளார்.

கூடலூர் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் கல்லூரி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் ராமகிருஷ்ணன்-விஜயலட்சுமி. தாயகம் திரும்பியவர்களான இவர்கள் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கார்த்திக் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில இணைச்செயலாளராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து