எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு அதை எதிர்க்கின்றது” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (07.12.2025) சென்னை, மண்ணடி அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் 5 நிலை ராஜகோபுரத்தினை உயர்த்தும் திருப்பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு செய்து இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கின்றது,
இந்த அரசு பொறுபேற்ற பிறகு. உறுதித்தன்மை வாய்ந்த திருக்கோயில்கள், இராஜகோபுரங்கள் காலசூழ்நிலைக்கு ஏற்றார்போல் தரை மட்டம் உயர்ந்து இருக்கின்ற அளவில் அவற்றை இடித்து கட்டுவதற்கு பதிலாக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, அதன் உறுதிதன்மையை உறுதி செய்த பின் தாழ்வாக இருக்கின்ற திருக்கோயில்களை உயர் நிலைக்கு (லிப்டிங்) கொண்டு வருகின்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை 25 திருக்கோயில்களில் மேற்கொண்டது.
அதில் 11 திருக்கோயில்களின் பணிகள் நிறைவுற்றுள்ளன. இதர 14 திருக்கோயில்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு திருக்கோயிலான வியாசர்பாடி, இரவீஸ்வரர் திருக்கோயிலை உயர்த்தும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அந்த அத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தை பொறுத்த அளவில் நான் பலமுறை சொல்லியது போல், ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள், செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டீர்கள், நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை, எந்த ஒரு பொருளையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்று தான் கூறுகிறோம். சமாதானம் என்பது மிக உயர்ந்த வார்த்தை. அனைத்து நிலையிலும் மக்களை சமமாக பார்ப்பது, ஆகவே இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றதால் அதை எதிர்க்கின்றது இந்த அரசு.
திருப்பரங்குன்றத்தில் இந்த பிரச்சனையை கையில் எடுத்த பிறகு லட்சக்கணக்கான மக்கள் அந்த கிரிவலத்தில் பங்கேற்று உள்ளார்கள். இந்த அரசு முழுமையான பாதுகாப்பை பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்தார்கள். இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களே திரண்டு அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். விரோதி பட்டியிலில் இடம்பெற்று கொண்டே இருக்கின்ற தமிழ்நாட்டிலே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் நெகட்டிவ்வான விஷயங்களை பற்றி பேசும்போது பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கூற வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதற்காக வருந்த மாட்டோம், கோபப்பட மாட்டோம். குறைகளை நிவர்த்தி செய்வோம். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு தங்கத் தேரை ஒப்படைத்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். ஆறு கிலோ மீட்டர் தூரம் அந்த ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடினாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடினாலும் அவர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு திகழும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
10-வது முறையாக முதல்வராக பதவியேற்பு: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்
07 Dec 2025புதுடெல்லி, அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
07 Dec 2025விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர்
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
-
சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 116 பேர் பலி
07 Dec 2025கார்டூமின், சூடானில் டிரோன் தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 116 பேர் பலியான சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
4 மணிநேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
07 Dec 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீரா
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து
07 Dec 2025திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 900 ஆனது
07 Dec 2025ஜகர்தா, சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
-
ஜெய்ஸ்வால், கோலி அபாரம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
07 Dec 2025ஜெய்ஸ்வால், கோலி அபார பேட்டிங்கால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில்
கைப்பற்றியது.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


