முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தொடங்கும் டி-20 தொடருக்கு ஹார்திக், சுப்மன் கில் தயார்: கேப்டன் சூர்யகுமார் யாதவ்

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      விளையாட்டு
Suriya Yathav 2024-10-05

மும்பை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்.... 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று முதல் டி20 தொடர் தொடங்குகிறது. ஆசிய கோப்பைத் தொடரின்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் நீண்ட நாள்களாக இடம்பெறாமலிருந்து ஹார்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கழுத்து வலியின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில்லும் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

உடல்தகுதியுடன்..

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இருவரும் தற்போது முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

பிளேயிங் லெவனில்... 

ஹார்திக் பாண்டியா புதிய பந்தில் பந்துவீச்சில் ஈடுபடும்போது, இந்திய அணிக்கு நிறைய தெரிவுகள் கிடைத்ததை நீங்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பார்த்திருப்பீர்கள். அவர் புதிய பந்தில் பந்துவீசும்போது, பிளேயிங் லெவனை தேர்வு செய்ய அணி நிர்வாகத்துக்கு பெரிய அளவில் சிரமம் இருப்பதில்லை. பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியாக இருப்பது அணிக்கு சமபலத்தை கொடுக்கிறது. ஐ.சி.சி. உள்பட அனைத்து பெரிய தொடர்களிலும் ஹார்திக் பாண்டியாவின் அனுபவம் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. மிகப் பெரிய போட்டிகளில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது அனுபவம் அணிக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து