முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

பீகாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அங்கு முன்னதாக எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, 'இண்டியா' கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள்,  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும்  நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து