எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:-
அவைத் தலைவருக்கு வணக்கம். எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
எஸ்.ஐ.ஆர். தேர்தல் காலம் அல்லாத பிறகாலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை சுருக்க திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்கிற பெயரில் அவ்வப்போது நடந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சித் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பீகாரில் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற 47 லட்சம் பேரில் யாராவது ஒருவர் அண்டைய நாட்டைச் சார்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரும் இந்திய குடிமக்கள். பீகாரை சார்ந்த மண்ணின் மைந்தர்கள். ஆக இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் குடியுரிமையையும் பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிறபோது எதிர்காலத்தில் இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கிற நிலை உருவாகும் என்கின்ற அச்சத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இந்தச் சூழலில் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். அம்பேத்கர் முன்வைத்த அந்தக் கோரிக்கையை நான் மீண்டும் இந்த அவையில் வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தேர்தல் ஜனநாயகம் நமது தேசத்தின் உயிர் மூச்சு கொள்கையாகும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் அதனை வெற்றிகரமாக இயங்கச் செய்வதிலும் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவனங்கள் அரசியல் தலையீடு உள்ள சிக்கலாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் புலனாய்வு நிறுவனங்கள் நீதித்துறைகள் இவை அனைத்திலும் இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
தேர்தல் ஆணையத்திற்கு குடியுரிமையை பரிசோதிக்கிற எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்காத போது சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எப்படி அது துணிந்தது? 13 ஆவணங்களை கூறுகிறது. இந்த 13 ஆவணங்களும் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஆவணங்கள். எனவே எஸ்.ஐ.ஆர். என்கிற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிற வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நடக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் அங்கே வருகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் சட்ட விரோதமாக குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்று தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்து இந்த ஈ.வி.எம். முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது உள்துறை அமைச்சகம்
02 Mar 2026புதுடெல்லி, ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு
-
தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
02 Mar 2026தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் திட்டவட்ட மறுப்பு
02 Mar 2026தெஹ்ரான், ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெர
-
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
02 Mar 2026லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
02 Mar 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார்.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ம் தேதி தீர்ப்பு
02 Mar 2026மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
-
தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
02 Mar 2026சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு த
-
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்
02 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார
-
தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்
02 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வ
-
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன் தகவல்
02 Mar 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
02 Mar 2026வாஷிங்டன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Mar 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள், அழகர் கோவில் கள்ளழகர், திருச்செந்தூர் முருகன் ஆகிய கோவில்களில் தெப்பம்.
- திருமோகூர் காளமேகப்பெருமாள் யானை மலையில் சம்ஹார லீலை.
- நத்தம்
-
இன்றைய நாள் எப்படி?
02 Mar 2026


