முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      இந்தியா
Cong 2024-06-19

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

கேரளாவில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஆளும் எல்.டி.எப்.-ஐ விட அதிக கிராம மற்றும் வட்டாரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். வெற்றிப்பெற்றுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் பகிர்ந்துகொண்ட நிலவரங்களின்படி, ஆளும் எல்.டி.எப். 366 மற்றும் யு.டி.எப். 473 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றிப்பெற்றன. யு.டி.எப். 55 நகராட்சிகள், 8 மாவட்ட பஞ்சாயத்துகள், 81 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் 4 மாநகராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே நேரத்தில், எல்.டி.எப். 28 நகராட்சிகள், 6 மாவட்ட பஞ்சாயத்துகள், 65 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு மாநகராட்சியில் மட்டும் வெற்றிப்பெற்றுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. 26 கிராம பஞ்சாயத்துகள், 2 நகராட்சி மற்றும் ஒரு மாநகராட்சியில் வெற்றிப்பெற்றன.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. பெரும்பான்மை எண்ணிக்கையை நெருங்கி வெற்றிப்பெற்றுள்ளது. 101 இடங்களைக் கொண்ட மாநகராட்சியில் என்.டி.ஏ. 49 இடங்களிலும், எல்.டி.எப். 28 இடங்களிலும், யு.டி.எப். 19 வார்டுகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன. மாநகராட்சி மன்றத்தில் பெரும்பான்மையைப் பெற என்.டி.ஏ.-க்கு 51 இடங்கள் தேவை. இதனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற இரண்டு சுயேச்சைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து