முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      இந்தியா
TK-Sivakumar

பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை  வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக வி.பி.ஜி ராம்-ஜி என்ற சட்ட மசோதாவை பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் 5-ம் தேதி நாடு தழுவிய மக்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டரக்ள் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 140-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் அல்ல, வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள்தான் உண்மையான தலைவர்கள். நமது காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பா.ஜ.க.-விடம் என்ன வரலாறு இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிறந்தவர்கள்.

மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா?. நான் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கொண்டு வெளியிடப் போகிறேன். 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். 70 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன. பெங்களூருவில் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்டிடங்களைக் கட்டப் போகிறோம். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம். இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து