முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      இந்தியா
Modi 2024-12-04

புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சுமார் 90 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் 2027-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. 

ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மக்கள் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வரும். இது உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கிடையேயான கூட்டாண்மையின் சிறந்த உதாரணம்,” என்று வர்த்தகம் ஒப்பந்தம் குறித்து உரையாற்றியபோது மோடி தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் இந்திய உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

குடியரசு நாள் விழாவை ஒட்டி சிறப்பு விருந்தினர்களாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான்டா் லெயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டப்பூர்வ ஆய்வுகளை முடித்த பின், இந்த ஒப்பந்தத்தின் முறையான கையெழுத்து நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நடைபெற்றுவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சின் அம்சங்கள், இருதரப்புக்கும் இடையே உத்திசார்ந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளி, காலணி உள்பட சுமார் 90 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பெரும் நன்மைகள்:

1. மீன் போன்ற கடல்சார் பொருட்கள் மீதான வரி 26% லிருந்து 0% ஆகக் குறையும்.

2. காலணிகள் மீதான வரி 17% லிருந்து 0% ஆகக் குறையும்.

3. ரசாயனப் பொருட்கள் மீதான வரி 12.8% லிருந்து 0% ஆகக் குறையும்.

4. ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும்.

5. நுகர்வோர் பொருட்கள் மீதான வரி 10.5% லிருந்து 0% ஆகக் குறையும்.

6. அடிப்படை உலோகங்கள் மீதான வரி 10% லிருந்து 0% ஆகக் குறையும்.

7. ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

8. விளையாட்டுப் பொருட்கள் மீதான வரி 4.7% லிருந்து 0% ஆகக் குறையும்.

9. ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மீதான வரி 4%லிருந்து 0% ஆகக் குறையும்.

ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்:

1. கார்களுக்கான இறக்குமதி வரிகள் படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.

2. ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.

3. 50% வரி விதிக்கப்படும் பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட 

உணவுப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

4. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.

5. பெரும்பாலான இரசாயனப் பொருட்களின் மீதான வரிகளும் முழுமையாக நீக்கப்படும்.

6. இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்ப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து