முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-27

புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் ஒரே பிரதமர் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.

இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுதான் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் ஒரு அமைச்சர் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்ததாகும். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 196 வரை நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1967 முதல் 1969 வரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பி. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி 2-வது முறையாக வெற்றி பெற்றதும், முழு நேர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024-ல் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்றதும் தொடர்ந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவமபர் 26-ந்தேதி ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து