முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      தமிழகம்
Kanimozhi

தஞ்சாவூர், தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று தஞ்சாவூர் ரீனா மித்ரா மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டு அறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இவ்விழா மேடையில் பேசிய கனிமொழி எம்.பி, எல்லாருக்குமான ஒரு ஆட்சியை, அனைவரையும் அரவணைக்கக்கூடிய ஒரு ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமான திட்டங்களை ஒவ்வொரு நாளும் வகுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே அந்தத் திட்டங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும். அதனால், உங்களைச் சந்தித்து, உங்களுடைய கருத்துக்களை இணைத்து, உங்களுடைய தேர்தல் அறிக்கையாக நாம் ஒன்றாக தயாரிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தத் தேர்தல் அறிக்கை குழு நேற்று உங்களைச் சந்திக்க வந்திருக்கிறது. 

உங்கள் கருத்துகளையும், கோரிக்கைகளையும், நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். என்ற ஒரு போர்டல் இருக்கிறது. tnmanifesto.ai என்ற அந்தப் போர்டல் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியது. அந்தப் போர்டலுக்குள் சென்று, உங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யலாம். அல்லது, உங்கள் கருத்துகளை வாய்மொழியாக பகிர்ந்து கொண்டாலும், அவை எங்களிடம் வந்து சேரும் வகையில் அந்த அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, நேற்று இந்தக் கூட்டத்தில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள் கூட, இந்தப் போர்டல் வழியாக தங்களுடைய கருத்துகளை எங்களோடு அவசியமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து