முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவருமான ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமை வகிக்கிறாா்.

மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவுறையாற்றுகிறாா். மாநாட்டில் வெளிநாடு, மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக்கின் 52 மாவட்ட நிா்வாகிகள், மாணவா், மகளிா், அயலக தமிழா், காயிதே மில்லத் பேரவை நிா்வாகிகள், உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா். மேலும், மாநாட்டில் முதல்வரிடம் முஸ்லிம் மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பல ஆண்டுகளாக பட்டா இல்லாத பள்ளிவாசல்களுக்கு பட்டா வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து