எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்?
சக இந்தியர்களைப் போல், கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்க்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.


