முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-OPS-2026-02-20

சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதி.மு.க.வில் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து யாருடன் கூட்டணி என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்காமல் இருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தை அதி.மு.க. எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மட்டும் பங்கேற்றிருந்தார்.

இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார். அவரது மகனும், அதி.மு.க. முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க, திடீர் திருப்பமாக தி.மு.க. கூட்டணியில் இணைந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் சந்திப்பானது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து