எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Sunday, February 22, 2026 to Saturday, February 28, 2026
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். கோவில், குளம் என புனித யாத்திரைகள் மேற்கொள்வர். வாழ்க்கையில் முன்னேற்றம் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழ், கௌரவம் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனு செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும்.
பரணி -- இந்த வாரம் மேல்மட்டத்தில் உள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும், பெருமையும் சேரும். சிலருக்குத் தொழிலில் ஏற்படும் பின்னடைவு காரணமாக பணவரவுகளில் தாமதம் ஏற்படும். தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும். சிலரின் சுறுசுறுப்பற்ற நிலையில், காரியத் தடைகள், தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். தீய நண்பர்களை விட்டு அகன்றால் அவமானங்கள் ஏற்படாது தப்பிக்கலாம்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதியும், தன விருத்தியும் ஏற்படும். அன்னதானம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவர். குடும்பத்திற்குத் தேவையான வருமானங்கள் பிறர் மூலமாகவும் வந்து சேரும். எதிர்பாராத தனவரவுகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வியாபார தொடர்புகள் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். வீட்டில் உள்ளவர்கள் மீது வீணான கோபத்தைத் தவிருங்கள். வரவை விட செலவுகள் அதிகரிக்கும் ஆதலால், பிறரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். ஓய்வின்றி உழைக்கும் உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம். சிலருக்கு அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய தொழில் தொடர்புகள் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும், பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்கள் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாய் ஓரளவு அதிகரிக்கும். சென்ற வாரம் இருந்த கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பிறரிடம் கோபத்தைக் காட்டுவது கூடாது. அமைதியைக் கடைப்பிடியுங்கள்.
ரோகிணி – இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். மேடைப் பேச்சாளர்களில் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் கிடைக்கும்.. பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். அரசுப் பணியாளர்கள் அயராத உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களின் போது வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் ஏற்படும். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட்டு வருமானம் குறையும்.. அதன் காரணமாகக் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். சிலருக்கு வீட்டுச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கைகொடுப்பர். செலவுகள் அதிகமாகிப் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள் இந்த வாரம் பல வழிகளிலும் பணம் குவியும். உறவுகளின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் மகிழ்ச்சி தரும். ஆன்மிக வழிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். புகழ், மரியதை ஆகியவை கூடும். குடும்பத்தில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பணவிஷயமான அலைச்சல்கள் அதிகம் இருக்கும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறுகள் எழலாம்.
திருவாதிரை --- இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். சிலர் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படும். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சொன்ன பேச்சுக் கேட்காத பிள்ளைகளின் செயல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். பொதுச்சேவை போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படலாம். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை கூடும்
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடனுதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
ஹஸ்தம் – இந்த வாரம் வாக்கு வன்மையால் புகழ், பலவகைப் பணியாட்கள், சொகுசு உபகரணங்கள் ஆகியவை கிடைக்கும். அளவற்ற பணம் பலவழிகளிலும் வந்து குவியும். அதிக வருமானமும், காரிய வெற்றியும் ஏற்படும். தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். அறிவுச் சுடரொளி வீசும். உத்தம குணங்கள் அதிகமாகும். எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா எனச் செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். இனிய பயணங்கள் மற்றும் புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். அந்தஸ்து உயரும்.
திருவோணம்- இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். மதிப்பு, கௌரவம் ஆகியவை உயரும். சிலருக்கு அன்பாலும், பாசத்தாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் சீராகும். பொறுமையுடன் வாழ்ந்தால் பெருமை சேரும். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே வீட்டுத் தேவைகளுக்குப் பணவரவு போதுமானதாக அமையும். கஷ்டங்களும், கவலைகளும் மறைந்து, தெளிவும், தெம்பும் அதிகரிக்கும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் கூடும். பலவகை யோகமும் சந்ததி விருத்தியும் ஏற்படும். அதிக தனலாபமும், மனை, வீடுகள் மூலம் இலாபமும் ஏற்படும். தெய்வபக்தி பெருகும். பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கொள்வர். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவால் உறவில் விரிசல்கள் ஏற்படலாம். ஒதுங்கி நின்றாலும் சிலர் உங்களை வம்புக்கு இழுப்பர். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி சமாதானமாகப் போவது நல்லது. தங்கள் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், மனோதைரியம் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் கவனச் சிதறல்கள் ஏற்படும். அதன் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
பூசம் -- இந்த வாரம் தங்களுக்குக் கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது கழிந்து, மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும்.
ஆயில்யம் – இந்த வாரம் அதிக வருமானம் மற்றும் தனலாபம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றி, ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஆகியவையும் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். . வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். செலவுக்கும் குறைவிருக்காது. அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வைத்தியச் செலவுகள் கூடலாம்.
பூரம் – இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். உல்லாசப் பொழுதுபோக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். வார மத்தியில் உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். அரசுத் துறையினரால் அச்சம் ஏற்படலாம். திட்டமிடப்பட்ட செயல்களில் பிறரால் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்கள் விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
சுவாதி – இந்த வாரம் தெய்வ தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படும். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். சிலருக்குத் தீயோரின் செயல் கண்டு ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்து, ஆதாயம் தரும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். பொருளாதார நிலைகள் திருப்திகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். வாழ்க்கையில் அனைத்து விதத்திலும் மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் தயவால் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். அவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும். அதாவது நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.
ரேவதி- இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். திறமை மிக்கவராக விளங்குவார். ஆயினும், அனுகூலமற்ற பயணங்களும் அதனால் லாபக் குறைவும் ஏற்படும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம், கடின உழைப்புக்குப் பின் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம். கவனம் தேவை. உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.
பூராடம் – இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும் பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் பெருகும். நல்ல பணியாளர்கள் அமைவர். மனைவியின் ஒத்துழைப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்திற்காகச் செல்லும் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் குடும்பத்தில் சுகசௌகரியங்கள் பெருகும். பணவரவு அதிகரிக்கும், புதிய நண்பர்களால் சந்தோஷம் கூடும். இனிய பயணங்களால் இன்பம் சேரும். குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் தலைதூக்கினாலும், பிற்பகுதியில் நிலைமை சீரடையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தை அதிகரிக்கப் புதிய யுக்திகளைக் கையாள்தல் அவசியம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அனுஷம் – இந்த வாரம் தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். நீண்ட நாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி புனித யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பர். குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளால் வேண்டியது நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சொத்துக்களை மாற்றி விடும் போது அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உயர் பதவிகளை அடையும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்குப் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.
சதயம்- இந்த வாரம் கெட்டி மேளம் கொட்டும் நேரமாதலால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான காலம் கனியும். பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து ஈடுபட்டால் பங்குச்சந்தையில், ஓரளவு இழப்பைத் தவிர்க்கலாம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். குடும்ப நிகழ்வுகள் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். மனைவி சொல் கேட்டுக் கணவன் நடப்பான். குழந்தைகளின் சுகவாழ்வுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். சொல் வாக்கால், செல்வாக்குப் பெறுவீர்கள். பள்ளிக்கான செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
வார ராசிபலன்
21 Feb 2026


