முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      உலகம்
Trump

வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100 சதவீதம் தவறானது. நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே அவரது கருத்து.

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன். எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும். ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர். அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.

ஈரானுடனான போர் சாத்தியங்கள் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறானவை, வேண்டும் என்றே எழுதப்பட்டவை. நான்தான் முடிவெடுப்பேன். ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடக்காவிட்டால், அது அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரதிருஷ்டவமான நாளாக இருக்கும். ஈரான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்கள். இதுபோன்ற ஒன்று அவர்களுக்கு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து