முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      உலகம்
Trump 2023-04-13

புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அதிபர் ட்ரம்ப் இல்லத்திற்குள் நுழைந்த இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளித்த ட்ரம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் ட்ரம்ப் இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்தின் போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர். அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், "நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக வினவினார்.

மேலும், "ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசினார். 

கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. ட்ரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து