முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 1-ம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      தமிழகம்
Weather 2024-12-02

சென்னை, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடலில் திங்கள்கிழமை (பிப்.23) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.

இந்த நிலையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சிவலோகம், குழித்துறை, சுருளக்கோடு, புத்தன் அணை- தலா 30 மி.மீ., கயத்தாறு (தூத்துக்குடி), பாலமோா் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம், சிற்றாறு, சிவகிரி (தென்காசி), கோவில்பட்டி (தூத்துக்குடி), கழுகுமலை (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), எழுமலை (மதுரை)- தலா 20 மி.மீ. மழை பதிவானது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து