முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் காங். தலைவர் கைது: போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி ஐகோர்ட் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டுக்குள் கடந்த 20-ம் தேதி நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தாங்கள் அணிந்திருந்த டிசர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். 

இந்நிலையில்  இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது நமது வரலாற்றுப் பாரம்பரியம். அது நமது ரத்தத்தில் கலந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை. சமரசம் செய்து கொண்ட பிரதமருக்கு எதிராக தேச நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய இளைஞர் காங்கிரசின் சக உறுப்பினர்களை நினைத்த நான் பெருமைப்படுகிறேன்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் ஜவுளி தொழிலுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் நமது தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். இந்த உண்மையை தேசத்துக்கு எடுத்துக் கூறியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் பிற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகார போக்கு மற்றும் கோழைத்தனத்துக்கு எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சியும் நானும் நமது சக உறுப்பினர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறோம். அச்சம் வேண்டாம். உண்மையும் அரசியலமைப்பும் எங்களுடன் உள்ளன’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து