முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம் : 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து