முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      இந்தியா
Nedanyagu 2024-12-10

புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலான தனது பேச்சின்போது, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் சமீபத்திய சூழல் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தினேன். இந்த போரினை முன்கூட்டியே நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினார். மேலும், வளைகுடா நாட்டின் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து, இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று கூறினார்.

இஸ்ரேலின் மத்திய நகரமான பெய்ட் ஷெமேஷில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். இது போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து