முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      உலகம்
Iran-war-1-2026-03-02

லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிக்க தற்காப்புத் தாக்குதல்களை நடத்த தயார் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

ஈரானின் பழிவாங்கும் ராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று நாடுகளும் தங்கள் சொந்த நலன்களையும் தங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதற்கான, ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒப்புக் கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து