முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      இந்தியா      வர்த்தகம்
Share-market

மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 81,287.19 சென்செக்ஸ் ஆக இருந்தது. நேற்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 2743.46 புள்ளிகள் சரிந்து 78543.73 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு பெரும் சரிவை சந்தித்தன. பின்னர் மெல்ல மெல்ல சென்செக்ஸ் உயருவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10 மணியளவில் நேற்று வர்த்தகத்தில் அதிகப்படியாக சென்செக்ஸ் 80632.55 புள்ளிகளில் வர்த்தகமானது.

பின்னர் 2 மணிக்கு 79451.26 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக 3.30 மணிக்கு சென்செக்ஸ் 80238.93 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1048.34 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இது முந்தைய வெள்ளிக்கிழமையுடன் 1.29 சதவீதம் சரிவாகும். அதேபோல் இந்திய பங்குச் சந்தையின் குறியீடு நிஃப்டியும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 25178.65 ஆக இருந்தது. நேற்று காலை 519.40 புள்ளிகள் சரிந்து 24659.25 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேற்று அதிகபட்சமாக 24989.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24603.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 24865.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 312.95 புள்ளிகள் சரிந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ்., எல் அண்டு டி, இந்துஸ்தான் யுனிலிவர், இன்போசிஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி டைட்டன் கோ, ஹெச்.சி.எல். டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட் அண்டு ஸ்பெஷல் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி.சி., சன் பார்மா இன்ட்ஸ் பங்குகள் மற்றும் ஏற்றம் கண்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து