முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      இந்தியா
modi

புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில், கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.

மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது. பயங்கரவாதம், தீவிரவாதம், தீவிர சிந்தனைகள் ஆகியவை நமக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதற்கும் பெரிய சவால்களாக உள்ளன. இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளித்து உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய நாடுகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.

உலகம் முழுவதும் உருவாகும் பதற்றங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருந்துள்ளது. இந்தியா தொடர்ந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தி வருகிறது. இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அமைதிக்கான குரல் மேலும் வலிமை பெறும்” என தெரிவித்தார். 

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ‘‘பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகிறது. அங்குள்ள நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து