எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை.ஆக12 - காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் ரூ.2 கோடியே 70 லட்சம் பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினார்..
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
முதல்வர் ஜெயலலிதா நேற்று (11.8.2014) தலைமைச் செயலகத்தில், ஸ்காட்லாந்து நாட்டின், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார், செல்வி ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் வழங்கினார்கள்.
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகளைக் கட்டுதல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா 19.12.2011 அன்று ஆணையிட்டிருந்தார். இதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார்; ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி ஜோஷ்னா சின்னப்பா மற்றும் செல்வி தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை;
மேசைப்பந்து (Table Tennis) ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ்; ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை;
என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஊக்கத் தொகையினைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியமைக்காக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது,முதல்வர் ஜெயலலிதா , "Congratulations. நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன். I wish you many more victories in the future" "" என ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளையும் வாழ்த்தியதோடு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்
"Once again I offer my congratulations to all of you. You have brought glory and pride for the State of Tamilnadu and for the country and I wish you all greater and greater success" என்று தெரிவித்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
21 Jul 2025சென்னை, மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.