எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் திறந்து வைத்து 27 பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை வழங்கினார்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது,
அரசுப் பொருட்காட்சி மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சி மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதுடன் மட்டுமல்லாமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 10 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பொருட்காட்சி கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் அரங்கம் அமைப்பதற்கு ஏதுவாக துறை ஒன்றிற்கு ரூ.66,000ஃ- வழங்கப்பட்டு வந்த நிதி தற்போது உயர்த்தப்பட்டு ரூ.70,000ஃ- ஆக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இதற்கு முன்னர் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 187-வது பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிய எளிமையாக அமையும் எனத் தெரிவித்தார்.
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
காரைக்குடியில் இன்று அரசுப் பொருட்காட்சி 187-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியின் நோக்கம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டம் பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் 17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தினை பிரித்து 15.03.1985 முதல் தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. இங்கு காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் ஆகியத் திருக்கோவில்கள் பிரசித்துப் பெற்றவை. காரைக்குடி செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியம் மிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி செட்டிநாடு சமையலுக்கு புகழ் பெற்றது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் அமையப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவுக்கூறும் விதமாக திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது நினைவாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னமும் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.
கவியரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றக்குடியில் தெற்கு ரத வீதியில் ஆன்மீகத்தை போற்றும் வகையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 2 அரசு சார்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட 13 கடைகள் இடம் பெறுகின்றன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ஃ-ம், சிறியவர்களுக்கு ரூ.10ஃ-ம், மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ஃ-மாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 184 அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு ரூ.37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. தற்போது 187-வது அரசுப் பொருட்காட்சியாக 23 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வாயிலாக நலத்திட்டங்களை பெறுவது குறித்து விவரங்களை நன்கு அறிந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.உல.ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊடகப் பிரிவினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை
15 Jul 2025சபினா பார்க் : ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
-
4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விலகல்? - கேப்டன் சுப்மன் கில் பதில்
15 Jul 2025லண்டன் : 4வது டெஸ்ட் போட்டி; பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்பது குறித்து சுப்மன் கில் பதிலளித்துள்ளார்.
தொடர் சமன்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் யாஷ் தயாளை கைது செய்ய தடை
15 Jul 2025அலகாபாத் : பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: இ.பி.எஸ்.க்கு அமைச்சர் பதில்
15 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
-
சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளை: திருமாவளவனுக்கு முதல்வர் புகழாரம்
15 Jul 2025சிதம்பரம், சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திருமாவளவன் திகழ்வதாக முதல்வர் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
15 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு
15 Jul 2025சென்னை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் போராட்டத்துக்கு சச்சின் பாராட்டு
15 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்: இறுதிவரை போராடிய இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர்
15 Jul 2025புதுடெல்லி, காமராஜருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
அரியலூரில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
15 Jul 2025அரியலூர், பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் க
-
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்