எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் உழவியல் துறை முனைவர் மா.விஜயகுமார் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பற்றி கூறுகையில், வேளாண் பெருமக்கள் பயிர் தொழிலைத் தனித்து மேற்கொண்டு அல்லல் உறுவதைத் தவிர்த்து பல்வேறு வேளாண் சார்புத்தொழில்களான பால்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, சான எரிவாயுக்கலம் அமைத்தல், வேளாண் காடுகள் மற்றும் பழ மரங்கள் வளர்த்தல், தேனீ வளர்த்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றை இணைத்துச் செயல்படும்போது வெளிச்சந்தையில் ஏற்படும் விலைத்தட்டுப்பாட்டை சரிக்கட்டி நிலையான நிகரலாபம் பெற வாய்ப்பேற்படும். இதில் ஒரு பிரிவில் கிடைக்கும் கழிவு மற்றும் விளைபொருள்களை பண்ணை அளவிலேயே சுழற்சி செய்வதன் மூலம் மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக்கி செலவைக் குறைத்து நிகர இலாபத்தைப் பெருக்கிகொள்ளலாம்.
நன்செய் - பயிர், மீன், கோழி அல்லது புறா அல்லது ஆடு
நன்செய் நிலத்தில் 10 சென்ட் நிலப்பரப்பு உள்ள மீன் குட்டையில் 400 மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை) வளர்க்கலாம். மீன்களுக்கு உணவாக மீன் குட்டைகளின் மேல் கோழி மற்றும் புறா வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் உணவு மற்றும் வாணிபப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும்பொழுது நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்துடன் கால்நடை தீவனத்திற்காக கம்பு நேப்பியர் புல் மற்றும் வேலிமசால் கலப்புப்பயிராக பயிரிட வேண்டும். பயிர், மீன் மற்றும் ஆடு ஒருங்கிணைக்கும்போது கிடைக்கும் எரு மீன்களுக்கு உணவாக இடலாம். புpன்னர் மீன்கள் அறுவடை செய்த பின்பு கிடைக்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சுழற்சி செய்வதன் மூலம் மண்வளம் மற்றும் மகசூல் கூடும்.
தோட்டக்கால் - பயிர், கால்நடை, சாணஎரிவாயு, மரம் வளர்ப்பு மற்றும் தேனீ அல்லது காளான் வளர்ப்பு
பருத்தி அல்லது கரும்பில் ஊடுபயிராக பாசிப்பயிரும், சோளத்தில் தட்டைபயிரும் பயிரிடலாம். 50 சென்ட் நிலப்பரப்பில் ¾ பாகம் தீவனப்பயிரான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அத்துடன் பயருவகை தீவனமான குதிரைமசால் ¼ பாகம் நிலத்திலும் பயிரிடப்படலாம். இது கறவைமாடுகளுக்குத் தேவையான பயறுவகை மற்றும் பசுந்தீவனத் தேவையை ஈடுகட்டும். கால்நடை கழிவுகளை சிறப்பான சுழற்சி முறையில் பெறப்படும் எரிவாயு, சமையல் மற்றும் மின்சார விளக்குகளுக்கு பய்னபடுத்தப்படலாம். இவ்வாறு பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது, சாணத்திலுள்ள களை விதைகள் கொல்லப்பட்டு தொழுஉரத்தின் தரம் உயர்த்தப்படுகிறது. இவற்றை மண்புழு உரமாக்கி நல்ல எருவாக மாற்றப்பட்டு வயல்களுக்கு இமுவதால் மண்ணின் வளம் மேம்படும். இதைப் போன்றே காளான் வளர்ப்பை நாளொன்றுக்கு 5 கிலோ என்ற அளவில் உற்பத்தி செய்யும் தொழிலை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இணைப்பதால் ஆண்டு முழுவதும் நிலையான வருமாணம் பெற ஏதுவாகின்றது.
முயல் வளர்ப்புத் திட்டத்தினையும் தோட்டக்காலுக்கான பண்ணைய முறையில் இணைத்து அதிக பலனைப் பெற முடியும். 10 பெண் மற்றும் 1 ஆண் முயல் கலப்பின் மூலம் 200 குட்டிகளும், ஆண்டொன்றிற்கு 1000 கிலோ எடையுள்ள இறைச்சியும் பெறலாம். தென்னை மரங்களில் வாய்ககாலின் ஓரமாக 4 மீட்டர் இடைவெளியில் நடுவதன் மூலம் ஒரு ஹெக்டர் நிலத்தை சுற்றிலும் 52 மரங்களை வளர்க்கலாம். வருடத்திற்கு 5200 காய்களையும் நிகர வருமானமாக ரூ.7800 வரையும் பெறமுடியும். வுpவசாயக் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் பழங்கள், கீரைவகைகள் போன்றவை பெறுவதற்கு பண்ணை இல்லத்திற்கு அருகிலுள்ள 200 ச.மீ. பரப்பில் வீட்டுத்தோட்டம் அமைத்து பயன்பெறலாம். ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வீட்டுத் தோட்டத்தில் பொருத்துவதன் மூலம் பூப்பயிர்களான சூரியகாந்தி, தென்னை போன்றவற்றிலிருந்து தேன் சேகரிக்கவும் ஏதுவாகிறது.
மானாவாரி
மானாவாரி நிலங்களில் வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் தரமான தீவன இலைகளை தரத்தக்க மரம் வளர்க்கும் திட்டத்தை இணைத்து செயல்படுவதன் மூலம் நிலையான வருமானம் பெற ஏதுவாகின்றது. முானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான ஆடு வளர்ப்பு, எருமை மாடு வளர்ப்பு, புறா வளர்ப்பு, முயல் மற்றும் காடை வளர்ப்பு போன்றவற்றை இணைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும். மேலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாமான காட்டு மரங்களை வளர்ப்பதன் மூலம் 8 முதல் 10 ஆண்டுகளில் தரமான மரச்சாமான் செய்ய ஏற்ற மரங்களைப் பெற்று பயன் அடையலாம். இதைப்போலவே வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை மானாவாரியில் கிடைக்கும் குறைந்த மழையளவைக் கொண்டே வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம்.
மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தலைச்சேரி இன ஆடுகளை மானாவாரியில் வளர்க்கும்போது பல்வேறு தீவனங்களை உணவாக எடுத்துக்கொண்டு உடல் எடை கூட வாய்ப்புள்ளது. தலைச்சேரி இன ஆடுகள் தன் குட்டிகளின் தேவைக்கு மேல் நாளொன்றிற்கு 80 முதல் 100 மி.லி. வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வினத்தை இரட்டைப் பலன் கொண்ட வகை என்று குறிப்பிடலாம். 20 பெட்டை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 45 குட்டிகளை பெற முடியும். ஓவ்வொரு குட்டியும் பால் ஊட்ட மறக்கும்போது சராசரியாக 12 கிலோ உயிர் எடை உடையதாகவும், ஆண்nடொன்றிற்கு 540 கிலோ வரை உயிர் எடை தரவ ல்லதாகவும் இருப்பதால் இவற்றிலிருந்து ரூ.43,200 வரல வருமானமாகப் பெறலாம்.
எருமை வளர்ப்புத் திட்டத்தை மானாவாரி வேளாண்மையில் ஒரு அங்கமாக இணைப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 3 எருமை மாடுகளை 1 எக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் தானியங்களின் தட்டை பயறு வகைக் கழிவுகள் மற்றும் நீண்ட கால புல் வகைகளை மட்டுமே தீவனமாகப் பய்னபடுத்தி வளர்க்க முடியும். 3 எருமைகளில், 2 எருமைகள் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் கொடுக்கும்படி பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிக்கும் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொண்றுக்கு 9 லிட்டர் பாலும், ஆண்டுக்கு 3285 லிட்டரும் பெற ஏதுவாகின்றது.
மானாவாரியில் பண்ணைக் குட்டை இணைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆதிக மழையால் மண் அரிப்பினால் வீணாகும் நீரை குறைக்கவும் பண்ணையின் தாழ்வான பகுதியில் மொத்த சாகுபடிபரப்பில் 1/25 பாகத்தில் பண்ணைக் குட்டை அமைக்கலாம். இக்குட்டையில் தேங்கிய மழைநீர் கடைசியாக கிடைத்த மழைக்குப் பிறகு 30 முதல் 40 நாட்கள் வரைக் குட்டையில் தங்கியிருப்பதால் நீண்ட வயது தீவன மற்றும் பழமரங்களும் ஓரிருமுறை நீர் விட பயன்படும். இத்துடன், மழை நீரோடு அடித்து வரப்பட்ட சத்தான வண்டல் சேகரிக்கவும் பயன்படுகிறது. நீண்ட பருவ மழை கொண்ட பகுதிகளின் குட்டையில் நீர் இருப்பு
3½ முதல் 4 மாதங்கள் வரை நீடித்திருக்கும். இத்தகு நிலையில் “திலோப்பியா” போன்ற மீன் இனத்தை வளர்த்து மீன் இறைச்சியைப் பெறலாம். மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொகுப்பு:- முனைவர் மா.விஜயகுமார் (உழவியல்)
முனைவர் ப.கீதா (திட்ட ஒருங்கிணைப்பாளர்)
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
மு.க.முத்து மறைவு: முதல்வரை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
20 Jul 2025சென்னை : மு.க. முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.