முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் பற்றி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் பற்றி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ், தலைமையில் ஆணையாளர்  அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்க்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கத்தில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் 15.09.2017 முதல் 02.10.2017 வரை பல்வேறு தூய்;மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பில்லர் ஹால், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக தூய்மையே சேவை இயக்கம் உறுதிமொழியினை ஆணையாளர் அவர்கள் வாசிக்க அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர். 
அதனைத் தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மற்றும் ஆணையாளர் முன்னிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மையே சேவை உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்  ப.மணிவண்ணன், நகர்நல அலுவலர்  சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர்கள்  பழனிச்சாமி,  ரமேஷ்,   கௌசலாம்பிகை, உதவி ஆணையாளர் (வருவாய்)  ரங்கராஜன், நகரமைப்பு அலுவலர்  ஐ.ரெங்கநாதன், உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்;திரவேல், செயற்பொறியாளர் (தெருவிளக்கு)  செந்தில், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து