முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை குடிநீர் வாரியம் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர் நோக்க கீழ்கண்ட நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      சென்னை

சென்னை குடிநீர் வாரியம் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர் நோக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் கழிவுநீர் கட்டமைப்புகள் அனைத்தும் 113 ஜெட்ராடிங் யந்திரங்கள், 43 சூப்பர் சக்கர் யந்திரங்கள், 30 ஜெட்டிங் மற்றும் சக்ஷன் யந்திரங்கள் மற்றும் 239 தூர்வாரும் யந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. பழுதடைந்த ஆள் நுழைவாயில் மூடிகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகின்றன. அனைத்து கழிவுநீரகற்று நிலையங்களும் தொடர்ந்து இயங்கும் வகையில், மின் தடை காலத்திலும் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பருவமழை

அனைத்து பகுதியிலும் குடிநீரின் தரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தரக்கட்டுபாடு அலுவலகம் நாளொன்றுக்கு 100 லிருந்து 150 இடங்களில் கூடுதல் மாதிரிகள் மற்றும் நுண்ணுயிர் பரிசோதனைக்காக 30 லிருந்து 50 ஆக கூடுதல் மாதிரிகள் எடுத்து பரிசோதித்து வருகிறது. குடிநீரில் தினசரி 2000 இடங்களில் பரிசோதிக்கப்பட்ட குளோரின் அளவு தற்பொழுது 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போதுமான அளவு வேதிபொருட்கள், அதாவது சுண்ணாம்பு, பிளிச்சிங் பவுடர், ஹைப்போ குளோடைட் திரவம், குளோரின் வாயு மற்றும் குளோரின் மாத்திரைகள் அனைத்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும், பகிர்மான நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மழைகால பணிகளை கண்காணிப்பதற்காக வாரியத்தின் மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எண்.1, பம்பிங் ஸ்டேஷன் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2ல் அமைந்துள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 24/7 நேர சிறப்பு பொது குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகின்றது. பொது மக்கள் தொலைபேசி எண். 4567 4567 மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.. சென்னை குடிநீர் வாரியம். பெருநகர சென்னை மாநகராட்சி வேண்டுகோளுக்கு இணங்க நிவாரண முகாம்களுக்கு குடிநீர் வழங்க தயாராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து