எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, - சுற்றுப்புறச் சூழல்களான நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசில்லாமல் வைத்திட திடக்கழிவு மேலாண்மையினை பொதுமக்கள் நல்ல முறையில் கடைபிடித்திட வேண்டும் என்று தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய (வடுகபட்டி) அலுவலகத்தில், விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசுத்துறைகளுடன் இணைந்து பொதுமக்கள் குளங்களை தூர் வாருதல், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், கூட்டுப்பண்ணையத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், குடிமராமத்துப் பணிகள், இயற்கை உரங்கள் தயாரித்தல், அரசின் சார்பில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு தேவையான பாதை வசதி, தடுப்பணைகள் ஏற்படுத்துதல், உலர் கலங்கள் அமைத்தல், நெடுங்குளம் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரித்திடவும், வெற்றிலை பதப்படுத்தும் கிட்டங்கி அமைத்தல், மாங்காய் சார்ந்த தொழில்கள் ஏற்படுத்துதல், வேளாண் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வேண்டுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்திற்குப்பின் கலெக்டர் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண் பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் உருவாகும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறியாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பின்னர் தூய்மை காவலர்கள் குப்பை சேகரிக்க வருகின்ற போது வழங்கிட வேண்டும். மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகள் மூலம் மறு சுழற்சி முறையில் தார் சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல்களான நீர், நிலம், காற்று இவற்றை மாசில்லாமல் வைத்திட திடக்கழிவு மேலாண்மையினை நல்ல முறையில் கடைபிடித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) குருசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகம்மது அப்துல் நசீர், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, வேளாண் பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


