முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் இடம்

சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளதாம்.  இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடமும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

அதிக வெப்பநிலை கொண்ட பாலைவனம் எது தெரியுமா?

இந்தியாவில் தார் பாலைவனம் காணப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமாக பரந்து விரிந்து இருப்பது சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 3.6 லட்சம் மைல்கள் சதுர பரப்பளவு கொண்டவையாகும். இங்கு வெப்பநிலை சில சமயங்களில் 136 டிகிரி வரை கூட எகிறுமாம். சராசரியாகவே இங்கு வெப்பநிலை 100 டிகிரிக்கு மேலேதான் உயர்ந்து காணப்படுமாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

நெட்வொர்க் இல்லையா ?

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம்.

சடலத்துடன் நடனமாடும் சடங்கு

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..

திப்பு சுல்தான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி

இன்றைக்கு செயற்கை கோள்களை சுமந்த படி விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகளை நாம் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். அதே போல ராணுவத்தினரின் போர் பயிற்சியின் போதும் ராக்கெட் வடிவிலான ஏவுகணைகளை கண்டிருப்போம். ராக்கெட், ஏவுகணை இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியவைதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 18 ஆம் நூற்றாண்டுவரை அனைத்து நாடுகளிலும் ராக்கெட்டுகள் மரம் அல்லது மூங்கிலை கொண்டே தயாரிக்கப்பட்டன. உலகிலேயே முதன் முதலாக உலோகத்தினாலான ராக்கெட்டை செய்தவன் திப்பு சுல்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குண்டூர் யுத்தத்தின் போது ஆங்கில படைகளை உலோக ராக்கெட்டுகளை பயன்படுத்தி தெறிக்க விட்டான். அவன் உருவாக்கிய ராக்கெட்டுகள் 20 செமீ நீளம் 8 செமீ விட்டமும் கொண்டவையாக சுமார் 3 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக விளங்கின. அன்றைய கால கட்டத்தில் மிக தொலை தூரம் சென்று தாக்கும் ராக்கெட் திப்புவினுடையது மட்டும்தான் என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே..

அதிசய கோயில்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ஏற்ற ஸ்தலமாக கருதப்படுவது திருநாகேஸ்வரம். இங்கு ராகுவுக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயக் காட்சியை பக்தர்கள் கண்குளிர காணமுடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago