முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

மக்கள் கொடுத்த நிலத்தை மறுத்த நாடக மேதை யார் தெரியுமா?

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் என போற்றப்பட்டவர் பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார். நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஆச்சாரப்பன் தெருவில்தான். ஆனால் தன் பெயருக்கு முன்னால், தன் முன்னோரின் ஊரான ‘பம்மல்’ என்பதை போட்டுக்கொண்டார். அந்த ஊர் மக்கள், அவரால் தங்கள் ஊருக்கு பெருமை கிடைத்ததற்காக தங்கள் அன்பின் அடையாளமாக சில ஏக்கர் நிலத்துக்கான உரிமையை அவருக்கு வழங்கினர். ஆனால் அவரோ ‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.எனக்கு எதற்கு நிலம்?’’ என்று கூறி மறுத்துவிட்டார்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

நீண்ட தொலைவு பறக்கும் பறவை இனம் எது தெரியுமா?

றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

இதுதான் காரணம்

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.

விண்வெளியில் இன்னொரு பூமி

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago