முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எடையை குறைக்க

காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஸ்ஸி,  பாதாம் பால், பழச்சாறுகள், எருமை பால், வாழைப்பழம்,  ஸ்மூத்தி இவற்றை காலையில் எடுக்கக்கூடாது. ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

மர்ம உருவம்

சூரியனை விமானம் போன்ற பொருள் ஒன்று கடப்பது போல புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. இது தற்போது, உலகளவில் வைரலாகி வருகிறது. சூரியனைக் கடக்கும் அந்த பொருள் 'சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரை ஈஸியாக லாக் செய்ய..

உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு  தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. Lock/Unlock செய்வது எப்படி? https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.‘Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ‘Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும். UID பட்டனை செலக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும். Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும். அவ்வளவுதான்.

மழைக்கால குளியல்

மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது. நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர். மேலும்  இது, நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.

நீல நிற கண்களை கொண்டவர்கள்

மனித குலத்தில் ஒரு காலத்தில் அனைவரும் அடர் பழுப்பு நிற கண்களை உடையவர்களாகவே இருந்தனர். பின்னர் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நீல நிற அதாவது பூனை கண் தோற்றமுடைய மனிதர்கள் தோன்றினர். அண்மையில் டேனிஷ் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்காண்டிநேவியா, துருக்கி, ஜோர்டான், இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள நீல நிற கண்களை உடைய மனிதர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என கண்டறிந்துள்ளார். அதுவே மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி நீல நிற கண்களை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago