முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மணப்பெண் ரோபோ

சீனாவில் பொறியாளர் ஒருவர் பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ளார். ஹவாய் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா என்பவர் யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அண்டார்டிகா துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் செய்த முதல் இந்திய பெண்

அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான  ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

சானிடைசர்கள் : கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை கொல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகை வேதிப்பொருள். இது விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயெதிர்ப்பு சக்தியும் பாதிப்படையும். இதனால் உடலும் பலவீனமடையும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டீசரைப் பயன்படுத்தி கை கழுவுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். முகத்தின் அருகில் கையைக் கொண்டு செல்வதினாலும் அந்த ரசாயனங்கள் சுவாசப்பாதை வழியே உடலினுள் நுழைந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ட்ரைக்ளோசன் இல்லாத சானிடைசரை வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்காகவே இருக்கிறது இயற்கையான சுத்திகரிப்பான்களான வேப்பிலையும், மஞ்சளும். இரண்டையும் நீரில் கலக்குங்கள்.. உடலை கைகளை கவலையின்றி கழுவுங்கள்.

அதிசய உடல்

மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.

வரலாற்றில் 7 ஆண்டுகள் பின்தங்கிய எத்தியோப்பியா

இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே

உலகின் மிகப்பெரிய குடும்பம் - உறுப்பினர்கள் எண்ணிக்கை 163

உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago