முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொடக்க கால வேக்குவம் கிளீனரை குதிரைகள் இழுத்து சென்றது தெரியுமா?

இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் அன்றாட வீட்டு உபயோக பொருள்களில் ஒன்றாக வேக்குவம் கிளீனரும் மாறி நீண்ட காலமாகி விட்டது. ஆனால் தொடக்க காலத்தில் அவற்றை குதிரையில் பூட்டி இழுத்து சென்றனர் என்றால் நம்ப முடிகிறதா..நம்மூர் கழிவுநீர் லாரிகளை போல மிகப் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட டேங்கரை குதிரைகள் தெருக்களில் இழுத்து செல்லும்.  அந்த குழாய்களை ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் கொண்டு சென்று பெட்ரோல் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மூலம்  தூசுகளும், குப்பைகளும் உறிஞ்சப்பட்டு டேங்கர்களில் சேமிக்கப்படும். அதுதான் இன்றைக்கு கையடக்க வேக்குவம் கிளீனரின் மூதாதை என்றால் ஆச்சரியம் தானே.

வியக்கவைக்கும் ஐஸ் மனிதர்

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் விம் ஹோஃப் என்ற 57 வயது நபருக்கு ‘ஐஸ் மனிதர்’ என்ற பெயரும் உண்டு. பனிக் கட்டியில் பல சாதனைகளைப் புரிந்ததால் இவருக்கு இந்த பெயர். ஜப்பான் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஐஸ் துகள்கள் நிறைந்த தொட்டியில் 2 மணி நேரம் அமர்ந்தும், ஆர்க்டிக் கடலில் ஐஸ்கட்டிகளுக்கு அடியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தும், பின்லாந்தில், பனி நிறைந்த சாலையில் வெறுங்காலில் மராத்தான் ஓடியும் சாதனை படைத்திருக்கிறார். இவ்வாறு பல சாதனைகளை புரிந்து 3 முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மேலும் 26 சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.

120 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் பல்பு

எந்த பல்பாக இருந்தாலும் நம்மூர் மின்சாரத்துக்கு சில மாதங்கள் தாங்குவதே பெரிய விஷயம். அதிலும் அந்த காலத்து குண்டு பல்பு என்றால் கேட்கவே வேண்டாம்...மின் அழுத்தம் சற்றே மாறினாலும் டப் பென்று மூச்சை நிறுத்தி விடும். வீடு இருண்டு விடும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் 120 ஆண்டுகளாக விடாமல் எரிந்து கொண்டிருக்கு குண்டு பல்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா..அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் ஈஸ்ட் அவென்யூவில் உள்ளது லிவர்மோர் ப்ளேசன்டன் தீயணைப்புத்துறை. இந்த தீயணைப்பு நிலையத்தில் தான் 1901 ஆம் ஆண்டிலிருந்து எரிகிறது இந்த அணையா குண்டு பல்பு. கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் பல்பு 1890 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனத்தால் ஓஹியோவிலுள்ள ஷெல்பியில் தயாரிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க கூடிய இந்த பல்ப் சென்டேனியல் பல்ப் என அழைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பல்ப் பொருத்தப்பட்ட பொழுது 30 வாட் வெளிச்சத்தை வெளியிட்டு கொண்டிருந்தது. தற்பொழுது மிகவும் மங்கலாக 4 வாட் இரவு விளக்கு போன்ற வெளிச்சத்தை வெளியிடுகிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா..

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

மக்கள் தலைவன்

பல கி.மீ. தூரம் கிளைச்சாலைகள் வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்தால் மட்டும் பேருந்துகளை பிடிக்கமுடியும் என்றிருந்த குக்கிராமங்களுக்கு முதன்முதலாக டவுன் பஸ்களை ஓடவிட்டவர் முறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

டைட்டானிக் கப்பல்

1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும்  எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago