முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

உலகிலேயே மிகவும் உயரமான மலைச் சிகரம்

உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் எது என்று கேட்டால் எல்லோரும் டக்கென்று எவரெஸ்ட் என்றுதான் சொல்வோம். ஆனால் கொஞ்சம் புவியியல் பற்றி தெரிந்தவர்கள் சற்றே யோசிப்பார்கள்.. ஏன் தெரியுமா... எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் தான்.. ஆனால் மெளனா கீ என்ற மலை இருக்கிறதல்லவா அது எவரெஸ்டை காட்டிலும் 3 ஆயிரம் அடி உயரம்.. ஆனால் என்ன பிரச்னை தெரியுமா பசிபிக் கடலில் இருக்கும் இந்த மலை நீர்மட்டத்துக்கு வெளியே வெறும் 13 ஆயிரத்து 796 அடி மட்டுமே தெரிகிறது. ஆனால் கடலுக்கு அடியிலிருந்து அதன் உயரத்தை அளந்தால் 32, 808 அடி உயரம் கொண்டதாகும். இதன் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியிருப்பதால் நம்மால் இதன் பிரம்மாண்டத்தை உணர முடியவில்லை அவ்வளவுதான்..

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்களை கேள்வி கேட்கும்

தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago