ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...
தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ. ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால் வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஆரோவில் நகரம். இந்நகரம் 124 உலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மூலம் கட்டப்பட்டது. யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என அங்கீகரித்துள்ளது. இங்கு, 50 நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.
தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


