முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சுற்றுச்சூழலுக்காக தானாகவே 16 ஆண்டுகள் சட்டம் பயின்ற முதியவரை உங்களுக்கு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்தவர் வாங் என்லின். இவர் 3 வகுப்பை கூட நிறைவு செய்யாதவர். ஆனால் இவர் தனக்கு தானே 16 ஆண்டுகள் சட்டம் பயின்றார். எதற்கு மற்றும் எப்படி தெரியுமா.. அவரது கிராமத்தை அருகில் இருந்த ரசாயன ஆலை மாசுபடுத்தியது. அதற்கு எதிராக சட்டப் போர் தொடுக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரால் அனைத்து சட்ட நூல்களையும் வாங்க பணமில்லை. எனவே உள்ளூரில் உள்ள புத்தக கடையில் பை நிறைய மக்காசோளத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அங்கேயே அமர்ந்து புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்து கொண்டார். டிக்சனரியின் உதவியால் அவர் சட்டம் பயின்று வழக்கையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றார். இறுதியில் தனது வழக்கில் கடந்த 2017 இல் வெற்றியும் பெற்றார் என்றால் ஆச்சரியம் தானே.

புகைப்பதால் மரணம்

195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா  2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.

முதல் காரை உருவாக்கியவர்

இன்றைய நவீன பெட்ரோல் கார்களுக்கான அடித்தளம் 1886ல் தான் உருவானது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர், பெட்ரோலில் இயங்கும் முதல் காரைக் கண்டுபிடித்தார். நம்மூர் ரிக்ஷாக்களைப் போல் மூன்று சக்கரங்கள் கொண்டதாக முதல் கார் இருந்தது. இதை, பேட்டன்ட் மோட்டார் கார் என்று கார்ல் பென்ஸ் பெயரிட்டு அழைத்தார். இவர்தான், முதல் கார் தொழிற்சாலை உருவாக்கி, கார்களை பொதுவிற்பனைக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் ஆவார். அந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள், மேற்கூரை ஆகியன கிடையாது, ஸ்டேரிங், 2 இருக்கைகள் மட்டுமே இருந்தன. துணியிலிருந்து அழுக்கைப் போக்கும் ‘லிக்ராய்’ என்றழைக்கப்பட்ட பென்சின் திரவம் தான் எரிபொருளாகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்