முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறு குச்சியே படகு...

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு  16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

குரூப் காலிங் வசதி

மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம். வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

555 நாட்கள் இதயம் இல்லாமல் வாழந்தவர்

24 வயதுடைய ‘ஸ்டான் லார்கின்’(Stan Larkin) என்ற வாலிபருக்கு தான் 2014 ஆம் ஆண்டு மிச்சிகன் மெடிக்கல் யூனிவெர்சிட்டியில் (University of Michigan Frankel Cardiovascular Centre)செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவர் அமெரிக்க்காவின் மிச்சிகன் நகரை சேர்ந்தார்.  ஸ்டான் லார்கின் பேமலியல் கார்டியோமயோபதி(familial cardiomyopathy) என்ற இதய நோயினால் பாதிக்கப்பற்றிருந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் இவர் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறினர். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால்,   சின்கார்டிஓ என அழைக்கப்படும் செயற்கை இதயத்தை பொறுத்த முடிவு செய்துள்ளனர். இது  சீரான ரத்த அழுத்தத்தை செயற்கையாக உடலுக்கு கொடுக்குப்பதற்கும் உதவுகிறது. இதற்காக 13 கிலோ எடையுடைய கம்ப்ரெஸ்ஸரை தனது பையில் எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். இந்த கம்ப்ரெஸ்ஸிலிருந்தான் இரு டியூபுகள் வழியாக சுத்தம் செய்யப்பட்ட காற்று வயிற்றின் வழியாக செயற்கை இதயத்துடன் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கருவி 24 /7  மணி நேரமும்  அவர் உடம்பிலேயே இருக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த நிமிடத்தில் உயிர் போய்விடும். மாற்று இதயம் கிடைக்காததால் 17 மாதங்கள் அதாவது 555 நாட்கள் அவர் இவ்வாறே உயிர் வாழ்ந்தார். பின்னர் ஒரு விபத்தில் இறந்தவரின் இதயம் இவருக்கு மாற்றி பொருத்தப்பட்ட பிறகு இவரிடமிருந்து இந்த கருவி அகற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்