முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீல நிற கண்களை கொண்டவர்கள்

மனித குலத்தில் ஒரு காலத்தில் அனைவரும் அடர் பழுப்பு நிற கண்களை உடையவர்களாகவே இருந்தனர். பின்னர் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நீல நிற அதாவது பூனை கண் தோற்றமுடைய மனிதர்கள் தோன்றினர். அண்மையில் டேனிஷ் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்காண்டிநேவியா, துருக்கி, ஜோர்டான், இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள நீல நிற கண்களை உடைய மனிதர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என கண்டறிந்துள்ளார். அதுவே மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி நீல நிற கண்களை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

உலகை ஆளும் ரோபோ

சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு 'ஜியா ஜியா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கேள்விகளுக்கு, ஏற்ப பதிலளிக்கும். சொன்ன வேலைகளை துரிதமாக செய்யுமாம்.

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

இறந்தவரின் கடைசி ஆசை

மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக  இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி  கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago