முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பீன்ஸ் பொரியல்

Cooking time in minutes: 
15
Ingredients: 

பீன்ஸ் பொரியல் செய்யத் தேவையான பொருள்கள்;

 1. பீன்ஸ் - 15.
 2. வெங்காயம் 1/2.
 3. பூண்டு - 4 பல்.
 4. பச்சை மிளகாய் - 1.
 5. மிளகாய் வத்தல் - 1.
 6. தேங்காய் துருவல்  - 1 ஸ்பூன். 
 7. எண்ணெய் - 2 ஸ்பூன். 
 8. கடுகு - 1 சிட்டிகை.
 9. கடலை பருப்பு 1/2 ஸ்பூன். 
 10. கொத்தமல்லி  சிறிதளவு.
 11. உப்பு தேவையான அளவு.
Method: 

பீன்ஸ் பொரியல் செய்முறை ;-

 1. அடுப்பில் குக்கரை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
 2. 15 பின்ஸ்சை நன்கு கழுவி அரை இன்ச் அளவுக்கு நறுக்கி குக்கரில் போடவும்.
 3. தேவையான அளவு உப்பு கலந்து விடவும்.
 4. குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
 5. மிக்சியில் வெங்காயம் ½, பூண்டு 4 பல், பச்சை மிளகாய் 1, மிளகாய் வத்தல் 1,தேங்காய் துருவல் 1 ஸ்பூன் போட்டு தண்ணீர் ஊற்றாமல் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
 6. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
 7. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
 8. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
 9. 1/4 ஸ்பூன் கடுகு போட்டு வதக்கவும்.
 10. கடலை பருப்பு 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
 11. மிக்சியில் அரைத்து  வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
 12. வேக வைத்த பின்ஸ்சை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
 13. வடி கட்டிய பின்ஸ்சை போட்டு மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கவும்.
 14. நன்றாக வதங்கி விட்டது.
 15. சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 16. சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்