முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அல்சர் குணமாக இயற்கை மருத்துவம்

 

  1. அல்சர் என்பது நமது குடலில் ஏற்படும் புண் ஆகும்,இது  குடல் அழுத்தி புண்,குடல் மேல்நோக்கி புண்,குடல் ஆழத்தன்மை புண்  என  3 வகைப்படும்.
  2. நேரம் தவறி சாப்பிடுவதாலும்,நேரம் தவறி தூங்குவதாலும் அல்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது.
  3. உணவு நமக்கு சக்தியை தருகிறது,தூக்கம் நமது உடலுக்கு சமநிலையை தருகிறது,இதில் குறைபாடு ஏற்படும் போது அல்சர் வருகிறது.
  4. நமது உடலில் அதிக சூடு இருந்தாலும் அல்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது.
  5. அல்சர் நோய் வரும் முன் மூடி உதிர்தல்,கண் எரிச்சல்,அடிக்கடி சிறுநீர் பிரிதல்,கால் மதமதப்பு  அரிப்பு மற்றும் பெண்களுக்கு வெள்ளை படுத்தல் ஆகியவை ஏற்படும். இவை அனைத்துமே நமது உடலில் வெப்பம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
  6. சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் வாயில்  பிசுபிசுப்பு நீர் சுரக்கும்,மற்றும் வாய் துர்நாற்றம் இருக்கும் இதுவே அல்சர் வருவதற்கு  அறிகுறி ஆகும்.
  7. சித்த மருத்துவத்தில் இந்நோய்க்கு சீரகம் நல்ல மருந்தாக உள்ளது,இரவு 20 கிராம் சீரகத்தை  200 மில்லி நீரில் போட்டு  150 மில்லி வரும் வரை நன்கு கொதிக்கவைத்து இதை மறுநாள் காலை எழுந்தவுடன் பல் விளக்கி குடித்துவர இந்நோய் குணமாகும்,மேலும் காலை வேலையில் கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட அல்சர் நோய் குணமாகும்.
  8. கருப்பு உளுந்து 1/2 கிலோ, சீரகம் 50 கிராம்,விராலி மஞ்சள் 2,பெருங்காயம் சிறிதளவு இவை அனைத்தையும் மை போன்று நன்றாக அரைத்து  மதிய வேளையில் சாதத்துடன் கலந்து சாப்பிட அல்சர் நோய் குணமாகும்.
  9. தினமும் இரவு உணவு உண்ட பின் 15 நிமிடம் கழித்து எதாவது ஒரு பழத்தை சாப்பிட வர அல்சர் நோய் குணமாகும்.
  10. காலை உணவை தவிர்த்தால் 12 வயது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு  கூட அல்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது, எனவே காலை உணவை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும், காலை உணவை தவிர்க்க கூடாது.
  11. உணவு கட்டுப்பாடு மூலம் அல்சர் நோய்யை தடுக்க முடியும்,உணவு உண்ட பின் காபி,டி மற்றும் குளிர்பானங்களை அருந்துவதன் மூலம் 100 சதவீதம் அல்சர் நோய் வர வாய்ப்புள்ளது.
  12. பல வகையான சத்து பொருள்கள் உடன் புளியையும் சேர்த்து செய்வதால் ரசத்தை அல்சர் நோய் உடையவர்கள் அளவாக சாப்பிடலாம்.
  13. கம்பு தோசை,கேப்பை தோசை,ஆகியவற்றை காலை வேளையில் சாப்பிடலாம்.
  14. காரம்,புளிப்பு,துவர்ப்பு ஆகிய சுவை உடைய உணவுகள் அல்சர் நோய் உடையவர்களுக்கு சேராது எனவே,இந்த சுவை சேர்த்த உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.
  15. புரோட்டாவை புளிக்குழம்பு மற்றும் அதிக காரமுள்ள குழம்புவகைகளுடன் தொடர்ந்து சாப்பிட்டால் அல்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது.
  16. எலுமிசை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை அல்சர் நோய் உடையவர்கள் தவிர்த்தல் நலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்