Idhayam Matrimony

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பா.ஜ பலவீனப்படுத்துவதாக குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சண்டிகர் - அரியானாவில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு மாநில விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா குற்றம் சாட்டியுள்ளார்.

அரியானாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வர் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் பா.ஜனதா அரசு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் மாற்றி அறிவித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஹூடா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சதார் கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜனதா அரசின் செயல்பாடுகளால் விவசாயிகள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக கரும்பு விவசாயிகள் தங்களது உற்பத்தியை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நீண்ட காலமாகியும் அவர்களுக்கு உரிய கொள்முதல் விலையை கொடுக்க மாநில அரசு மறுத்து வருகிறது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். ஆனால் மாநில அரசு இதில் எந்த கவனமும் காட்டவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து