முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      இந்தியா
Jaishankar 2023 06 08

புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அமெரிக்கா,இஸ்ரேல் - ஈரான் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் ஈரானில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாட்டு அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டின் உதவியுடன் இந்தியா வருவது பற்றிப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஈரானில் இருந்து இதுவரை 550 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கு உதவியாக இருந்த ஆர்மீனியா அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சவாலான நேரத்தில் அவர்களது ஆதரவுக்கு நன்றி” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் இதுபற்றி கூறுகையில், “ஈரானில் 9,000 இந்தியர்கள் தங்கியுள்ளனர். அதில் பலரும் மாணவர்கள். அவர்கள் அங்கிருந்து அஜர்பைஜான், ஆர்மீனியா மூலம் இந்தியா வர விரும்பினால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்தியா ஏற்கனவே பல இந்திய மாணவர்கள், பயணிகளை ஈரானின் தெஹ்ரான் நகரிலிருந்து வேறு பாதுகாப்பான நகரங்களுக்கு மாற்றியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து