முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      இந்தியா      வர்த்தகம்
Share-market

மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலை 75,444.22 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை குறைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,470.50(1.93%) புள்ளிகள் குறைந்து 74,563.92 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488.05 (2.06%) புள்ளிகள் குறைந்து 23,151.10 புள்ளிகளில் நிலை பெற்றது.

நேற்று மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 4 ஆண்டுகளில் பங்குச்சந்தைகளுக்கு இதுவே மிக மோசமான வாரம் என்று கூறப்படுகிறது. நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.62 சதவீதம், 2.52 சதவீதம் சரிந்தன. துறைவாரியாக, நிஃப்டி மெட்டல் 5 சதவீதம் சரிந்தது. காலையில் நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு மட்டும் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் வர்த்தக முடிவில் அனைத்துத் துறைகளும் சரிவில் முடிந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிந்தும் வர்த்தகமாகின. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.25 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 100.7 டாலராக உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச்சந்தைகள் நேற்று சரிந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து 3 ஆவது வாரமாக சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் ரூ. 20 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து