முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
Archana-Patnaik 2024-11-12

சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் சோதனை, விளம்பரங்கள் அழிப்பு என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க., நா.த.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் ஆர்.எஸ். பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பிரசார அனுமதி, நட்சத்திர வேட்பாளர்கள், கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஆகும் செலவு என தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல நேற்று  தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து